1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kalvi TV teaching syllabus to be announced before

கல்வி டி.வி பாட விவரம் - முன் கூட்டியே தெரியப்படுத்த உத்தரவு

tamilnadu
தமிழக அரசின் கல்வி டி.வி பாட விவரம் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துக என பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவு. 

 
கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது. தற்போதும் அப்படியே தொடர்கிறது.  
 
இந்நிலையில் தற்போது தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளது. தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டன. 
 
இதனிடையே, கல்வி டிவி பாட விவரங்களை முன் கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash