புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (14:08 IST)

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
குறிப்பாக இன்று 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் கனமழை நாளையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அடுத்து ஒரு சில மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் மற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது