1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (08:37 IST)

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்கள்?

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 

 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. 
 
மேலும் இன்று கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.