1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (14:37 IST)

தமிழ்நாடு முழுவதும் நாளை ரெட் அலர்ட் -வானிலை மையம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் இடையில் நான்கு நாட்கள் மழை இல்லாமல் இருந்ததால் பொது மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஆகிய இரண்டு பகுதிகளில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கவே நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது