புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 10 செப்டம்பர் 2018 (16:37 IST)

சென்னை, நாகை கடலில் மூழ்கும்; ஆனால் அது இயற்கை பேரிடர் இல்லை.....

புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் என்று தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் இயற்கை பேரிடர் குறித்து கூறியதாவது:-
 
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். இயற்கைக்கு எதிரான செயல்களை மனிதர்கள் செய்துவரும் போது நிலங்கள் அதன் உறுதியான தனமையை இழந்துவிடுகிறது. பேரிடர்கள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.
 
புவி வெப்பமயமாவதால் கடல்மட்டம் உயரும். இதனால் சென்னை நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.
 
நாகை மாவட்டத்துக்கு இதனால் பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால் நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நில மட்டம் தாழ்ந்துவிடும். இதனால் கடல்நீர் எளிதில் உட்புகுந்து விடும் என்று கூறினார்.