வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (08:32 IST)

சென்னை லயோலா கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி.. அதிர்ச்சி தகவல்..!

poison
சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலையை தடுக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சென்னை கல்லூரியில் படிக்கும் 24 வயது மாணவர் ஆன்டோ ஜாய் என்பவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இவர் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 
 
படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாததால் தற்கொலை என்ற விபரீத முடிவை இவர் எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
 
Edited by siva