ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (15:39 IST)

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்.. மாதிரி வடிவத்தை வெளியிட்ட சென்னை மெட்ரோ..!

சென்னை மெட்ரோவில் அடுத்த கட்டமாக ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களின் மாதிரி வடிவத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழிதடத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில்  பயணிகளின் விருப்பத்திற்குரிய ஒன்றாக உள்ளது என்பதும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
 இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் இரண்டில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உருவாக்க அல்ஸ்தாம் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
ரூபாய் 269 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தங்கள் மூலம் ஏற்கனவே 26 ரயில்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 10 ரயில்கள் என மொத்தம் 36 ரயில்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
 பூந்தமல்லி  வழித்தடம் 4ல்  கட்டப்படும் பணிமனையில், இன்னும் 28 மாதங்களில் 108 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரயில்கள்  இயக்கப்படும் என்றும், இந்த ரயில்கள் அனைத்தும் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வகையில் அமைக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva