வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (13:06 IST)

புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்

stalin
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட போது புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சியை தேவைப்படுகிறது என்று பேசியுள்ளார் 
 
புதுச்சேரியில் கவர்னர் ஆட்டிப்படைக்கும் ஆட்சி நடந்து வருகிறது என்றும் அங்கு மதவாத ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்
 
புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது என்றும் நிச்சயம் இங்கும் திமுக ஆட்சி அமையும் என்றும் புதுச்சேரி மீது எனக்கு தனி பாசம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துவிட முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva