செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:25 IST)

பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

cm stalin
வங்கக் கடலில் தோன்றிய உள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து நேற்று இரவு முதலே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழையால் ஏற்படும் சேதத்தை எதிர்கொள்ள மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் 
 
அது மட்டுமின்றி பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார்
 
சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெள்ளம் குறித்த சேத தகவல்களை அறிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran