புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2025 (11:57 IST)

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகள் பட்டியல்: சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த இடம்?

உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 60-வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு முன்னணி இதழ் வெளியிட்ட உலகின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் 2024 ஆம் ஆண்டுக்கானது. இந்த பட்டியல் மருத்துவக் கல்வியின் தரம், மாணவர் சேர்க்கை, சிறந்த துறைகள், உலகளாவிய நன்மதிப்பு உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
 
இந்த பட்டியலில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 22-வது இடத்தை டெல்லி எய்ம்ஸ் கல்வி  நிறுவனம் இடம்பெற்றுள்ளது. 37-வது இடத்தில் புனே​வில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், வேலூர் CMC மருத்துவக் கல்லூரி 46-வது இடத்தையும், புதுச்சேரி JIPMER மருத்துவக் கல்லூரி 55-வது இடத்தையும் பெற்றுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி 60-வது இடத்தையும், வாரணாசி மருத்துவக் கல்லூரி 69-வது இடத்தையும் பிடித்துள்ளது.
 
உலகின் 100 சிறந்த மருத்துவக் கல்லூரி பட்டியலில் முதல் 21 இடங்களை அமெரிக்க மருத்துவக் கல்லூரிகள் பிடித்துள்ளன. மொத்தமாக 100 சிறந்த கல்லூரிகளில் 48 கல்லூரிகள் அமெரிக்காவிலேயே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran