வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (11:27 IST)

அவரை மட்டும் நம்பிவிடாதீர்கள்: கருணாநிதி கூறிய அந்த நபர் யார்? ராம்தாஸ் டுவிட்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராம்தாஸ் அவர்கள் இன்று தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டுவீட் இதுதான்:
 
திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
 
இந்த டுவீட்டில் உள்ள அந்த நபர் யார் என நெட்டிசன்கள் தங்கள் எண்ணக்குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர். ஒருசிலர் வைகோ என்றும், ஒருசிலர் ஸ்டாலின் என்றும், ஒருசிலர் வீரமணி என்றும் இன்னும் சிலரோ அது ராம்தாஸ் என்றும் கூறி வருகின்றனர். உண்மையில் கருணாநிதி கூறியது யாரை என்பது டாக்டர் ராமதாஸ் அவர்களே கூறினால் தான் இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது