புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (19:02 IST)

இன்று இரவில் இருந்து நாளை வரை யாரும் வெளியே வர வேண்டாம்: அமைச்சர் கேகேஎஸ்.எஸ்.ஆர்

இன்று இரவிலிருந்து நாளை வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதன் காரணமாக வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிகனமழை காரணமாக இன்று இரவிலிருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் நீர்நிலைகளின் அருகில் நின்று செல்பி எடுக்கவும் ஆற்றை கடக்க கூடாது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வீட்டில் உள்ள ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்