வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (12:51 IST)

திரிஷா பற்றிய ஆபாச பேச்சு....நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்  மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில்  லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

இப்படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் 'லியோ படத்தில் திரிஷாவுடன் தனக்கு காட்சிகள் வைக்கப்படாதது' குறித்து அவர் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திரிஷா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சினிமாத்துறையினர்  நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகையும்,  பாஜக நிர்வாகியும் மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும், இந்த விவகாரத்தில் தான் முழுமையாக நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கமும் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றி மன்சூர் அலிகான் ஒரு பதிவிட்டிருந்தார்.

இவ்விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம்  தாமாக முன்வந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.