ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (07:35 IST)

ரகசியமாக நடந்த விஜய் மகன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் பூஜை!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சஞ்சய் லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது முதல் சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.