1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (13:57 IST)

சிறுவனின் மூக்கில் இருந்த மீன் – டாக்டர்கள் அதிர்ச்சி !

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவனின் மூக்கினுள் சின்னஞ்சிறிய மீன் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவரின் அருள்குமார். இவர் கடுமையான மூக்குவலியால் அவதிப்பட இவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனது மூக்கை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சிறிய மீன் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மீனை சிறுவனின் மூக்கில் இருந்து அப்புறப்படுத்தினர். சம்பவ தினத்தன்று அருள் குமார் கிணற்றில் குளிக்கும்போது இந்த மீன்  சிறுவனின் மூக்கினுள் சென்றிருக்கலாம் என தெரிகிறது.