வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:08 IST)

சிறுத்தை தோலை மஞ்சல் பூசி காயவைத்த முன்னாள் கவுன்சிலர்...வனத்துறை வழக்குப் பதிவு

தேனி அம்மாபட்டியில் சிறுத்தையை வேட்டையாடிய  முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் அம்மாவட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைப்பாண்டி.

இவர் சிறுத்தையை வேட்டையாடி அதன் தோலை தன் வீட்டின் மாடியில் மேல் காயவைத்திருப்பதாக வனத்துறையினருக்குத்  தகவல் வந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர்,  துரைப்பாண்டியின் வீட்டு மாடியில் மஞ்சல் பூசிக் காயவைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுத்தையின் தோலைக் கைப்பற்றி, துரைப்பாண்டியின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அங்கு மருத்துவர் மற்றும் விஏ.ஓவை வரவழைத்தத வனத்துறையினர் இந்த சிறுத்தை ஒரு வாரத்திற்கு முன்பு வேட்டையாடப்பட்டதாகவும், எங்கு? எப்போது வேட்டையாடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj