வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (16:27 IST)

’’ நிஜமான ஹீரோக்களின் அசத்தல் சேவை ’’ : மக்கள் நெகிழ்ச்சி

ஒரு நாட்டை எந்நேரமும் கண் துஞ்சாமல் காவல்காக்க வேண்டிய பொறுப்புடன், எதிரிநாட்டினர் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஒப்பற்ற பணிதான் ராணுவம். இதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ராணுவ வீரரின் வீரத்துக்கும் நாம் ஒரு சல்யூட் அடித்தே ஆக வேண்டும். 

சமீபத்தில் நடத்த புல்வாமா தாக்குதலில் தேசத்திற்காக தம் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் தன்னலமற்ற சேவையிலிருந்து அவர்களின் தீரத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
 
இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வருடத்திற்கொருமுறை கிடைக்கும் விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
 
ஆனால் தற்போது அவர்கள் ஓய்வெடுக்காமல் தங்கள் ஊரை தூய்மை செய்யும் உன்னதமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ’கன்னியாகுமரி ஜவான்ஸ்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை துவங்கி ஊரில் பல பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
 
நாட்டுக்கு பணியாற்றும் ராணுவவீரர்கள் ஓய்வு எடுக்க வந்த விடுமுறையிலும் நற்பணியில் ஈடுபட்டுள்ளது ஊர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.