1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (23:02 IST)

'நியோகோவ் வைரஸ்' பரவும் என்ற செய்தியைப் பரப்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

மனிதர்களுக்குப் பரவும் என்ற செய்தியைப் பரப்ப வேண்டாம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் புதியதாக நியோகோவ் என்ற வைரஸ் பரவி வருவதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் வவ்வால்கள் இடையே நியோகோவ் யோகம் என்ற புதிய வைரஸ் பரவி வருவதாகவும் அது மெர்ஸ் என்ற வைரஸ் போன்றே அதிகமாக தாக்கும் திறன் தற்போதைய கொரோனா வைரஸை போலவே பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் சீனாவின் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இந்த நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 இந்நிலையில்,  WHO  அறிவிக்கும் வரை நியோ கோவ் வைரஸ்  நியோகோவ் வகை கொரொனா வைரஸ் வவ்வாலில் இருந்து மற்றோரு வவ்வாலுக்குப் பரவக் கூடியது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.