தொண்டையில் பரவும் ஒமிக்ரான்; இருமல் இருந்தால் சோதனை! – சுகாதரத்துறை செயலாளர் எச்சரிக்கை!
ஒமிக்ரான் தொற்று தொண்டையில் ஏற்படுவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ளன. தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் இருவகை வைரஸ்களும் பரவி வரும் நிலையில் 100 பேரில் 85 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படுவதாக கூறப்படுகிறது. ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் மக்கள் அலட்சியம் செய்ய கூடாது என அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ”ஒமிக்ரான் தொற்றுகள் அதிகமாக மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் கண்டறியப்படுகின்றன. எனவே சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். மக்கள் அலட்சியம் செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார்.