வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜனவரி 2018 (08:59 IST)

ஜெயலலிதா மரணம் குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்; ஓ.பன்னீர் செல்வம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம் துணை முதல்வர் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். அவரது வெற்றி பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்தனர். தினகரனின் வெற்றியால் எடப்பாடி அணி அதிர்ந்து போனது. தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தினகரன் ஆதரவாளர்கள் பலரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினர். இதனையடுத்து தினகரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் தகவல்கள் பரவியது.  
 
இந்நிலையில் டெல்லிக்கு சென்று திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒருசிலர் புதிய கட்சி தொடங்குகின்றனர் என யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் என்றும், அதற்கு உயிர் இல்லை என்றும் கூறியுள்ளார். 
 
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்துக்கொண்டு இருக்கிறார். விசாரணை முடிந்தபின்னர்தான் முழு விவரங்களும் தெரிய வரும். எனவே ஜெயலலிதா மரணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.