புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2020 (15:11 IST)

திமுகவின் கையெழுத்து இயக்கம்... நாட்டுக்கு செய்யும் துரோகம் - நடிகர் ராதாரவி

திமுகவின் கையெழுத்து இயக்கம்... இந்திய இறையாண்மைக்கு எதிரானது நடிகர் ராதாரவி

சென்னை சாலிகிராமத்தில் பாஜகவின்  முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய செயலர் முரளிதரராவ்  அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி கூறியதாவது ;
 
 தமிழகத்தில் பாரதியாருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகர் ரஜினி சரியான கருத்துகளை கூறினார். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என  கூறினார்.
 
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற ராதாரவி, ரஜினியை விமர்சனம் செய்து வந்தார்.  அக்கட்சியில் இருந்து விலகிய அவர் மீண்டும் அதிமுகவுக்கு சென்றார். பின்னர் பாஜகவில் இணைந்து ரஜினியை பாராட்டிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.