திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (13:19 IST)

60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தவறு செய்யும் திமுக: பொன்.ராதாகிருஷ்ணன்

60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தவறு செய்யும் திமுக
1949 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட திமுக, 1967ஆம் ஆண்டு தான் ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வர முக்கிய காரணம் மாணவர்களின் எழுச்சி என்பதும், ஒரு மாணவரால் தான் காங்கிரஸ் முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜ் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாணவர்களை கவர திமுக திட்டமிட்டு வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 60 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களை உசுப்பேற்றி ஆட்சியைப் பிடித்தது போல் தற்போது குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்யான தகவல்களை மாணவர்களிடையே பரப்பி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் குற்றம் கூறியுள்ளார்
 
60 ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வர திமுக என்ன செய்ததோ அதையேதான் இப்போதும் செய்கிறது என்றும் என்று பொன் ராதாகிருஷ்ணன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பொன்ராதாகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா? என்பது  வரும் 2021 சட்டமன்ற தேர்தலின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது