1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (07:38 IST)

பிரசாந்த் கிஷோரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளி: பொன் ராதாகிருஷ்ணன்

பிரசாந்த் கிஷோருக்கு தொடர் வெற்றி கிடைத்து வரும் நிலையில் திமுகவுடனான அதன் உறவு பிரசாந்த் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும் என்று கருதுகிறேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு பிரசாந்த் கிசோர் பணிபுரிய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் இணையதளத்தில் உறுதி செய்துள்ளார்
 
சமீபத்தில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரசாந்த் கிசோர் பணி செய்துள்ளார் என்பதும் அங்கு மிகப்பெரிய வெற்றி அரவிந்த் கெஜ்ரிவால் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தை குறி வைத்துள்ள பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கும் இதேபோல் வெற்றியை தேடித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியபோது ’பிரசாந்த் கிசோர் உடனான திமுகவின் உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியை போன்றது. திமுகவுடனான உறவை பிரசாந்த் கிசோர் வாழ்வில் ஒரு கரும்புள்ளி ஆகவே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்
 
திமுக உறவால்  பிரசாந்த் கிஷோருக்கு கரும்புள்ளி கிடைக்கப் போகிறதா அல்லது வெற்றி கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்