திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (13:28 IST)

கொரோனா தடுப்பு பணி ஒரு பக்கம், ஊழல் அமைச்சர்கள் கணக்கெடுப்பு இன்னொரு பக்கம்: அதிர்ச்சியில் அதிமுக

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தடுப்பு பணி தமிழக அரசால் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கடந்த பத்தாண்டுகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்த ஊழல்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறதாம்
 
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் திமுகவிடம் தூது சென்றதாகவும் ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ஊழல் அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பாயும் என்று கூறப்படுள்ளதால் அதிமுக வட்டாரம் கதிகலங்கி உள்ளதாம்
 
இந்த நிலையில் பாஜக அதிரடியாக களம் இறங்கி ஊழல் பட்டியல் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பாஜக வந்தால் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை கொடுத்து வருவதாகவும் இதனால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
அதிமுகவில் ஊழல் செய்த அமைச்சர்கள் தற்போது திரிசங்கு நிலையில் இருப்பதாகவும் திமுகவுடன் சமாதானம் செய்வதா? அல்லது பாஜக ஆதரவு என்ற நிலையை எடுப்பதா? என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது