வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (12:53 IST)

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து திமுகவுக்கு தாவிய 300 பேர்!!

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 300 பேர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் ரஜினிகாந்த் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்து தொடர்ந்து பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். 
 
இந்தநிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 300 பேர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அந்த நிர்வாகிகள் நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்.