வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (07:46 IST)

தபால் வாக்குப்பதிவில் முறைகேடு என புகார்: சாலைமறியல் செய்த திமுக!

தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து திமுகவினர் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து நேற்று முன்தினம் முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கியது. சென்னையில் உள்ள 16 தொகுதிகள் உட்பட தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தபால் வாக்குகள் பெறும் பணி துவக்கப்பட்டது
 
80 வயதுக்கு அதிகமானோர், தேர்தல் பணிகளில் இருப்போர் உள்ளிட்டவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. தபால் வாக்குகள் சேகரிக்கும்போது சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் தபால் வாக்குகளை பாதுகாக்கும் இடத்திலும் சிசிடிவி வைக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தபால் ஓட்டு பதிவு செய்வதில் முறைகேடு என திடீரென புகார் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த புகார் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் மீண்டும் தபால் வாக்குகளை பெறும் பணியை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து திமுகவினர் திடீரென சாலை மறியல் செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் இந்த சாலை மறியல் செய்யப்பட்டதால் இரு பக்கமும் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது