வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை: மு.க.ஸ்டாலின்
கடந்த மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா அதிகம் இருந்ததாக கூறப்பட்டதால் அந்தத் தொகுதியின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனை அடுத்து சமீபத்தில் வேலூர் மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பானது. திமுக கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் ஏசி சண்முகம் அவர்கள் போட்டிருக்கிறார். இந்த இருவருக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலில் களப்பணியாற்றி திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டுமென தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வேலூர் கோட்டை வெற்றிக் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக தொண்டர்கள் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்