வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (17:37 IST)

பனை ஓலையா? பானை ஓலையா? மு.க.ஸ்டாலின் பேச்சில் தடுமாற்றம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பல அரசியல்வாதிகள் டங்க் ஸ்லிப் ஆகி உளறி வருவதை பல சமயங்களில் பார்த்திருக்கின்றோம். மாற்று கட்சிக்கு ஓட்டு போடும்படியும், சின்னத்தை மாற்றி கூறியும், பல வருடங்களுக்கு முன் இறந்தவரை பிரதமராக்குவோம் என்றும் ஒருசில அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் சமீபத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க,ஸ்டாலின், 'மண்பானைக்கு வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. பானை ஓலைகளில் எழுதுவது என்பது கற்களில் எளிய மக்களுக்கு எட்டாத செயல். அதனால்தான் எளிய மக்கள் பானைகளில் எழுதி வைத்தார்கள்' என்று பேசியுள்ளார்.
 
மண்பானைக்கு வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. பனை ஓலைகளில் எழுதுவது என்பது கற்காலங்களில் எளிய மக்களுக்கு எட்டாத செயல். அதனால்தான் எளிய மக்கள் பானைகளில் எழுதி வைத்தார்கள் என்று பேசுவதற்கு பதில் மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் பேசியதாக தெரிகிறது. இவ்வளவிற்கும் அவர் எழுதி வைத்த பேப்பரை பார்த்து தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது