தொடர்புடைய செய்திகள்
- சலார் பட தமிழக உரிமையைக் கைப்பற்றிய ரெட்ஜெயிண்ட் மூவிஸ்
- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. - அண்ணாமல
- இன்று மாலைக்குள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை: முதலமைச்சர் ஸ்டாலின்..!
- கரை வேட்டி இல்லை, கட்சி கொடி இல்லை.. சென்னையில் ஓபிஎஸ் அவசர ஆலோசனை..!
- நாளை மேல்முறையீடு செய்தவர்களுக்கு ரூ.1000: முதல்வர் வழங்குகிறார்...!
திமுக போட்டியிடும் தொகுதிகளை அதிகரிக்க ஸ்டாலின் திட்டம்.. கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி..!
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளை அதிகரிக்க அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.
திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க. ஆகிய கட்சிகள் இருக்கின்றன.
இந்த தேர்தலில் சுமார் 25-30 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் சீட்டுகளை குறைக்கவும் முதல்வர் முடிவு செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு ஒரு சீட்ள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் ஒருசில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
Edited by Siva
