அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு
சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் இயங்கி வரும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சற்றுமுன் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சற்றுமுன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு மர்ம தொலைபேசி அழைப்பில் அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்தி மொழி ஒரு மர்ம நபர் கூறியதாகவும், இதனையடுத்து உடனே அந்த தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதுவரை எந்தவிதமான வெடிகுண்டுகளும் சிக்கவில்லை என்ற தகவல் வந்துள்ளதால் இது வெறும் மிரட்டலாக இருக்கும் என கருதப்படுகிறது