திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (13:19 IST)

உயிரிழந்த மருத்துவர் சைமன் மனைவிக்கு ஆறுதல் கூறிய முதல்வர்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சென்னை மருத்துவர் சைமன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை அடக்கம் செய்ய கூட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒரு பெண் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் மருத்துவர் சைமன் குடும்பத்தார்களையும் அவருடைய நெருங்கிய நண்பர்களையும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மருத்துவர் சைமன் மனைவியிடம் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
இன்று சுமார் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் திரு.சைமன் அவர்களின் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்’ என்று பதிவு செய்துள்ளார். முதல்வரின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது