1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (11:18 IST)

சிறுமியை மயக்கி நிர்வாண படம்! பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

Camera
மும்பையில் 12 வயது சிறுமியை நிர்வாணமாக படம்பிடித்து பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் 12 வயது மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். கடந்த 2019ல் அமான் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் நெருங்கி பழகிய அமான் அடிக்கடி அவரை வெளியே அழைத்து சென்றுள்ளார்.

அப்படி ஒருமுறை தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்ற அமான், அவரை நிர்வாணமாக போட்டோ, வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை காட்டி சிறுமியை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் அடிக்கடி சிறுமி சில லட்சங்களை வீட்டில் திருடி அமானிடம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து வீட்டில் பணம் காணாமல் போனதை அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் விசாரணையில் சிறுமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்ததில் அமான் சிறுமியை நிர்வாண படத்தை சொல்லி மிரட்டி பணம் பறிப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அமானை கைது செய்த போலீஸார் அவர் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Edit by Prasanth.K