திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (21:39 IST)

பிரதமர் பேசியபோது மியூட் செய்த திமுக எம்பி!

modi
பிரதமர் மோடி நேற்று  இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். 
 
இந்த நிகழ்ச்சியில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொளி வாயிலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் பெரிய திரையில் பிரதமர் மோடி பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திமுக எம்.பி., கதிர் ஆனந்த், ‛பிரதமர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் அதனை அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் பேசும் ஹிந்தி நமக்குப் புரியாது. அதனால், அதனை மியூட் செய்துவிடலாம்' எனக் கூறி ஆடியோவை கட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.