சோடா பாட்டில் வீசத்தெரிந்தால் ஜீயராகிவிடலாம்: கிச்சுகிச்சு மூட்டும் கனிமொழி!

Last Modified சனி, 27 ஜனவரி 2018 (15:44 IST)
சென்னையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி சோட பாட்டில் வீசத்தெரியும் என பேசிய ஜீயரை விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.
 
பஸ் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை ஆட்சியல் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
 
இதனைத்தொடர்ந்து பேசிய கனிமொழி, பேருந்து கட்டணத்தை அரசு உடனே திரும்பபெற வலியுறுத்தினார். மேலும் ஜீயர்கள் ஆவதற்கு ஜாதி தான் அடிப்படை என்று நினைத்துக்கொண்டிருந்தோம், அந்த எண்ணம் தவறு, சோடா பாட்டிலும், கற்களும் வீசத்தெரிந்தாலே ஜீயர் ஆகிவிடலாம் என்றார் கனிமொழி.


இதில் மேலும் படிக்கவும் :