தொடர்புடைய செய்திகள்
- கன்னியாகுமரி காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்: அதிர்ச்சி தகவல்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா
- பிரனாப் முகர்ஜி… ஆழ்ந்த கோமா நிலையில் நீடிப்பு!
- வசந்தகுமார் உடல்நிலை எப்படி உள்ளது – மகன் விஜய் வசந்த் வெளியிட்ட அப்டேட்!
- தனியார் கல்லூரி சேர்க்கை பட்டியலில் சன்னி லியோன் பெயர் – எப்படி நடந்தது குளறுபடி!
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா வைரஸால் தமிழகத்தில் மட்டும் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்தியாவில் 70 ஆயிரம் பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்களை பாதித்துள்ள கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை பொதுமக்கள் மட்டுமன்றி மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ்க்கு கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் மற்றும் திமுக ஜெ அன்பழகன் ஆகியோர் பலியாகி உள்ளனர் என்பதும் 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கொரோனா உறுதியாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகி உள்ளதாக தெரிகிறது இதனால் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
