புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (12:01 IST)

மத்திய அமைச்சர்களின் ஆசிர்வாதம் யாத்திரை: நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணம்!

சமீபத்தில் மத்திய அரசு விரிவாக்கம் செய்யப்பட்டது என்பதும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் தெரிந்தது. தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் அவர்களும் இணை அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தநிலையில் புதியதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்கள்’ஆசிர்வாதம் யாத்திரை’ என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து நாடு முழுவதும் அமைச்சர்கள் ’ஆசிர்வாதம் யாத்திரை செய்ய இருப்பதாகவும் அப்போது பாஜக அரசின் செயல் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அவர்கள் மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
புதிய அமைச்சர்களின் இந்த ஆசீர்வாதம் யாத்திரை குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.