வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (17:13 IST)

அண்ணா நினைவு நாளில் தி.மு.க. அமைதிப் பேரணி

திமுக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அண்ணா சமாதி நோக்கி இன்று அமைதிப்பேரணி நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலகர்த்தாவும், திமுக வின்முதல் முதல்வருமான அண்ணாவின் 50ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வரை திமுகவினர் அமைதிப்பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியில் திமுக வின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமைத் தாங்கினார். காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த பேரணி ஒருமணிநேரத்திற்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று அவருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலில் செலுத்தினர்.

மேலும் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.