திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (16:32 IST)

காருக்கு வழிவிடாத கர்நாடக அரசு பேருந்து! அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்

தனது காருக்கு வழிவிடாமல் சென்ற கர்நாடக அரசுப் பேருந்தை வாணியம்பாடி திமுக பொறுப்பாளர் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 
வேலூரில் இருந்து பெங்களூருவுக்கு  கர்நாடக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு சென்றது.  நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு கார் வேகமாக ஹாரண் அடித்து முன்னோக்கி செல்ல முயன்றது. ஆனால் கர்நாடக அரசு பேருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு வழிவிடாமல் முன்னோக்கி சென்று கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காரில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து பேருந்தை வாணியம்பாடி அருகே வழிமறித்தனர். அவர்கள்   ஆயுதங்களுடன் பேருந்து ஓட்டுனர் குமரவேலுவை கடுமையாக தாக்கினர். தொடர்ந்து கர்நாடக அரசு பேரையும் அடித்து நொறுக்கினர். இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியே வந்தனர். இதற்கிடையே காரில் வந்தவர்கள் பேருந்து தாக்கிய பின்பு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.  தகவல் அறிந்து அங்கு வந்த வாணியம்பாடி போலீசார் ஓட்டுனர் குமரவேலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடக அரசு பேருந்தை அடித்து நொறுக்கியது வாணியம்பாடி திமுக நகர பொறுப்பாளர் சாரதி குமார் தலைமையில் வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ராஜேஷ் சிவா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அப்பு, பிரவீன் மற்றும் திமுக நகர பொறுப்பாளர் சாரதி குமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.