1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By VM
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (12:46 IST)

நான் முட்டாளா... குமரவேலுக்கு கோவை சரளா சரமாரி கேள்வி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் நிர்வாகி குமரவேல் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார்.
 
நடிகை கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் செய்வதை ஏற்க முடியாததால்  விலகியதாக  அவர் கூறியிருந்தார். இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் இதற்கு பதில் அளித்து பேசிய கோவை சரளா,  
 
குமரவேல் சொன்னதுபோல் நான் கட்சிக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகுது.  அதனால் எனக்கு அரசியல் தெரியாது. ஒன்னுமே தெரியாது. ஒரு முட்டாளை கொண்டு வந்து கமல்ஹாசன் வைத்துள்ளார் என குமரவேல் சொல்றாரா? அவர் நேரடியாக என்கிட்டயே இத சொல்லட்டும். நான் அவருக்கு பதில் சொல்றேன்.  நான் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவர். அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் என்னை அழைத்தார். என்னை மட்டும் அழைக்கவில்லை. மற்றவர்களும் இருந்தார்கள். அதாவது அரசியல் சம்பந்தபடாத பெரியவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? நான் மட்டும் தான் தெரிகிறேனா?” என பல கேள்விகளை எழுப்பினார்.