ஜெயலலிதாவிடம் பணிந்து, சசிகலாவிடம் தவழ்ந்து... எடப்பாடியாரை கலாய்த்த ஸ்டாலின்

Last Modified சனி, 16 பிப்ரவரி 2019 (16:23 IST)
தலைவர் ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். அவ்வப்போது இந்த கூட்டங்களில் அதிமுக அரசை விமர்சிக்கவும் செய்கிறார். 
 
அந்த வகையில், சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாக்குச்சாவடி திமுக முகவர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஸ்டாலின் பேசியது பின்வருமாறு,
 
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, இந்தியாவில் மட்டும் இல்லை, வேற எங்கியுமே இது மாதிரியான கிராம சபை கூட்டத்தை யாருமே நடத்தியது கிடையாது. மக்களுக்கு பயன்படக்கூடிய, பயனளிக்கக்கூடிய வகையில் இப்படி ஒரு கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பினாமிகளுக்கு ஒப்பந்தங்களை தருகிறார். திட்டப்பணிகளுக்கு லஞ்சம், குட்கா ஊழல் என தொடர்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி கொடநாட்டில் கொலை நடந்தது. அந்த கொலையை மறைப்பதற்காக 5 கொலைகள் நடந்தன.
 
ஜெயலலிதாவிடம் பணிவாக இருந்தவர், சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர் முதல்வர் பழனிசாமி, விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :