திமுக கூட்டணியில் கமல்? மு.க.ஸ்டாலின் அழைப்பா?

Last Modified வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:48 IST)
திமுகவின் ஊழல் என்ற பொதியை தாங்க நாங்கள் தயாராக இல்லை என்றும், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்தார்.
ஒருசில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறிய கமல், திடீரென 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என கமல் அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகவிருப்பதாகவும் அதில் கமல் கட்சி, விசிக, தமாக, மதிமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் இணையவுள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இணைய கமலுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :