புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (18:32 IST)

சோதனைகளை சாதனையாக்கி... எடப்பாடியாருக்கு தமிழிசை பாராட்டு மழை!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியும் வாழ்த்தியும் டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன் (பிப்ரவரி 15) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 
 
இதனை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் சாதனைகளை விளக்கும் வகையிலான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிமுகவினர் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில், இவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழிசை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சவாலான சூழலில் பதவியேற்ற போது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3 வது ஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள் என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.