திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 28 அக்டோபர் 2024 (07:13 IST)

காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு திமுக ரியாக்சன்..!

R S bharathi
"காய்த்த மரம் தான் கல்லடி படும்" என விஜய்யின் விமர்சனத்திற்கு, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பதில் அளித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய விஜய், "மக்கள் விரோத ஆட்சி நடத்திவிட்டு, 'திராவிட மாடல் ஆட்சி' என்று ஏமாற்றுகிறார்கள்" என்றும், "அவர்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயாச ஆட்சியா?" என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், "பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிடம் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்துகிறார்கள்" என்றும், "அவர்களும் நம் கொள்கை எதிரிகள் தான்" என்றும், திமுகவை தனது எதிரி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும், "ஒரு அரசு வீடு, உணவு, வேலை ஆகிய மூன்றையும் கொடுக்க முடியவில்லை என்றால், அந்த அரசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன?" என்று விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் திமுக விமர்சனத்திற்கு பதிலளித்த ஆர். எஸ். பாரதி, "திமுக என்பது ஆலமரம்; காய்த்த மரத்தில் தான் கல்லடி படும். யார் கல்லு எறிந்தாலும், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி திமுகவிற்கு உள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசியலுக்கு யார் வந்தாலும், திமுகவையே விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம்; அதே நேரத்தில் தக்க பதிலையும் கொடுப்போம்" என்று கூறியுள்ளார்.


Edited by Siva