அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?
தமிழக அமைச்சரவையில் உள்ள இரண்டு அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொன்முடி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம்.
தமிழக அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்த நிலையில், தற்போது வெளியான அறிவிப்பின் படி, ராஜ கண்ணப்பனிடம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறைகள் பொன்முடிக்கு மாற்றப்பட்டுள்ளன.
எனவே இனிமேல் அமைச்சர் பொன்முடி, வனம், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சராக இருப்பார் என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இனி ராஜ கண்ணப்பன் அவர்கள் பால்வளத்துறையை மட்டுமே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva