அனுமதி மறுக்கப்பட்டாலும் போராட்டம் நடைபெறும்: திமுக அறிவிப்பு!
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹரியானா உள்பட ஒருசில மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து அதன் பலன் அதற்கு பலன் இல்லாமல் உள்ளது மேலும் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு கொடுத்து வரும் கட்சிகளில் ஒன்று திமுக. ஏற்கனவே நாடு தழுவிய பாரத் பந்த்தில் கலந்துகொண்ட திமுக, தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தனது தோழமை கட்சிகளுடன் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது
தமிழகம் முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்று திமுக அறிவித்திருந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காவல்துறை அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது