திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி
திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று காலை அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன் காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்தே அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது துரைமுருகனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர் சென்னை திரும்பிய பின்னர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் என தெரிகிறது