திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 மே 2022 (14:08 IST)

பாஜகவில் 2 எல்.எல்.ஏ விக்கெட் அவுட்? திமுக எம்.பி. சொல்வது யாரை?

பாஜகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் தொடர்பில் உள்ளார்கள் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் டிவிட். 

 
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
 
திமுகவில் உதயநிதிக்கே முன்னுறிமை வழங்கப்படுகிறது. திமுகவில் 15 வருடமாக உழைத்த எனக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. நான் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக அங்கீகாரம் தராமல் உள்ளார்கள். திமுகவில் அங்கீகரிக்கப்படவில்லை என வருத்தம் உள்ளது. 
 
பதவியை வேண்டி பாஜகவில் இணையவில்லை. உழைப்புக்கு அங்கீகாரம் குடுக்கும் இடத்தில் இணையவேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்தேன். உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமே கொடுங்கள் என அண்ணாமலையிடம் கேட்டுள்ளேன்.நான் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்கும் இடத்தில் எனது தந்தை திருச்சி சிவா இல்லை என தெரிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக... உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம். 
 
பாஜகவில் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் நயினார் நாகேந்திரன் என்பது கூடுதல் தகவல்.