எல்லா பிரச்சனைக்கும் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் !!
சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல ஜொலிக்கும்.
கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தது வந்தாலே உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறைந்து விடும்.
சிலருக்கு சருமம் வறண்டு உலர்ந்து காணப்படும். இப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை தொடர்ந்து முகத்தில் தேய்த்து வர சருமம் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும்.
பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்குமுன் கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும். காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி ஏற்படும். பிள்ளை பேறு வேண்டுபவர்கள் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
தழும்புகள், முகத்திலுள்ள கரும் புள்ளிகள், உலர்ந்த சருமம் என சரும நோய்கள் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழை சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதனை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவி வேண்டும். அப்போது முகம் பொலிவு பெறும்.
சோற்றுக்கற்றாழை செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை தூண்டும். ஏப்பம், பசியின்மை, தண்டுவலி, மலசிக்கல், நரம்புசூடு போன்றவற்றை சரி செய்யும். தீக்காயங்களுக்கு உடனடி தீர்வு கற்றாழை சாறு தான். கற்றாழை சாறை தீக்காயங்களில் லேசாக தேய்த்து வர விரைவில் தீக்காயங்கள் ஆறும்.
இன்றைய அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது சோற்று கற்றாழை. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது. இதனை இரவு நேரங்களில் உடலில் தேய்த்து நல்ல மசாஜ் செய்துவந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.