ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (11:45 IST)

30 தொகுதிகளில் உதயசூரியன்.. கூட்டணி கட்சிகளுக்கு ஒரே ஒரு தொகுதி தான்.. அதிர்ச்சி கொடுத்த திமுக..!

30 தொகுதிகளில் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அது மட்டும் இன்றி கூட்டணி கட்சிகளுக்கு ஒரே ஒரு தொகுதி தான் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் திமுக வட்டாரங்களில் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உட்பட திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளை பெற்ற நிலையில் தற்போது அந்த கட்சிகளுக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் ஒதுக்கப்படும் என்றும் நீங்கள் உங்கள் சொந்த சின்னத்தில் தாராளமாக போட்டியிட்டு கொள்ளலாம் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே திமுக, மதிமுக, இடது கம்யூனிஸ்ட், மற்றும் இடது கம்யூனிஸ்ட், கமல்ஹாசன் கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒடுக்கப்படும் என்றும் பின்னால் தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி தரலாம் என்று திமுக தரப்பில் கூறியதாக தெரிகிறது.

விசிக உட்பட ஒரு சில கட்சிகள் இந்த முறை நான்கு தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றும் அதில் ஒரு தொகுதியாக பொது தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திமுக கறாராக கூறியிருப்பது  கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது

Edited by Siva