வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (11:50 IST)

மேகதாது் அணை விவகாரம்: நாளை அனைத்து கட்சி கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், தமிழக அரசின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்றும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் திமுக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது